 சிக்னல்களில் சிக்கி ,
சிக்னல்களில் சிக்கி ,
பரபரப்பான
வாகன நெரிசலில் 
காத்திருக்கும் 
அந்த தருணங்களில்...
பூகோளம் பிடிக்காத 
உங்களுக்கு...
விற்பனைக்கு வரும் 
அந்த
உலக உருண்டைகள்
உலக உருண்டைகள்
தேவைப்  படாமல் 
போகலாம்!!!!
Earphone இசையில் 
மூழ்கியிருக்கும் 
உங்களுக்கு..... 
அந்த 
வலுவிழந்த வயதானவரின் 
எச்சில் மறந்த  
பிச்சைக்  குரல் 
கேட்காமல் போகலாம்...
தமிழ் படிக்கத்  
தெரியாத 
உங்களை.....  
தலைப்புச்  செய்திகள் 
பாடி வரும்
அந்த 
நாளிதழ் முகங்கள்
ஈர்க்காமல் போகலாம் ....
ஈர்க்காமல் போகலாம் ....
எப்போதும் ஆணாய்
எப்போதும் பெண்ணாய்
வாழும் 
உங்களுக்கு.... 
அருவருப்பாய் 
அந்த 
அரவாணியின் அபலம் 
கடந்து போகலாம்..
ஏதேதோ எண்ணங்களில் 
சிக்கி தவிக்கும் 
உங்களுக்கு.. 
வாகனங்களை  கொஞ்சமாகவும்  
கண்களை மிகுதியாகவும்  
துடைக்கும்  
அந்த சிறுவனும்
அவன் கண்ணீரும் 
தெரியாமல் போகலாம்....
எதுவும் கொடுக்காமல் 
எதுவும் வாங்காமல் 
எதுவும் கவனிக்காமல் 
பயணங்களை 
நீங்கள் தொடர்வீர்கள்
உங்கள் 
சிகப்பு பச்சையாய் 
மாறியவுடன்....
அவர்கள்
பயணிக்காமல் 
காத்துக் கொண்டே 
இருப்பார்கள்  
வேறொருவரின் 
பச்சை சிகப்பாய் 
மாறும் வரை!!!

 
 
 
 
 
